TNPSC குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (நவ. 8) கடைசி நாளாக உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 6574 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான விண்ணப்ப கால அவகாசம் ஏற்கனவே நவம்பர் 5-ம் தேதி முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று, கால அவகாசம் நவம்பர் 8-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

அதன்படி, தகுதியுள்ளவர்கள் இன்று இரவு 11.59 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in/ அல்லது விண்ணப்பப் பக்கமான https://tnpsc.gov.in/tamil/Home.aspx மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களுக்கு, அதில் திருத்தங்கள் மேற்கொள்ள நவம்பர் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வு அடுத்த ஆண்டு (2027) ஜனவரி 10-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான தேர்வர்கள் கடைசி நாளான இன்று விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.