“ஆசிரியர்கள் தங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்”

மாறி வரும் தொழில்நுட்பத்திற்கு தகுந்தார் போல் ஆசிரியர்கள் தங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யம்பட்டு உள்ள புதுச்சேரியை சேர்ந்த ஆசிரியர் அரவிந்தராஜா தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வி…

மாறி வரும் தொழில்நுட்பத்திற்கு தகுந்தார் போல் ஆசிரியர்கள் தங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யம்பட்டு உள்ள புதுச்சேரியை சேர்ந்த ஆசிரியர் அரவிந்தராஜா தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்வியல் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன்
பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகத்தின் மூலம்
ஆண்டுதோறும் “தேசிய நல்லாசிரியர் விருது“ வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2022-ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் உள்ள அர்ச்சுன சுப்பராய நாயக்கர் அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர் அரவிந்தராஜாவுக்கு சிறந்த நல்லாசிரியருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் அரவிந்தராஜாவுக்கு துணைநிலை ஆளுநர் உட்பட பல்வேறு தரப்பினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விருதுக்கு தேர்வாகியுள்ளது குறித்து ஆசிரியர் அரவிந்தராஜா நியூஸ்7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும், கடந்த 20 ஆண்டுகளாக தனது பணியை சிறப்பான முறையில் செய்ததற்கான ஒரு பாராட்டாக கிடைத்திருக்க கூடிய இந்த விருது மிகவும் மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் தருவதாக தெரிவித்தார்.

மேலும், மாணவர்கள் பள்ளியில் நடத்தகூடிய பாடங்களை மட்டும் படிக்காமல் மற்ற புத்தங்களை அதிகம் படிக்க வேண்டும் எனவும், இயற்கையை பற்றி அதிகமாக மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனவும், மாறி வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றார்போல் ஆசிரியர்கள் தங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.