முக்கியச் செய்திகள் இந்தியா

ஆப்கன் விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம்

ஆப்கன் விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.

ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆப்கனை தலிபான் மீண்டும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டிலிருந்து பலர் வெளியேறி வருகின்றனர். பல நாடுகள் ஆப்கானில் சிக்கியுள்ள தங்கள் குடிமக்களை மீட்க முயன்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஆப்கனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த பணியில் அனைத்துக் கட்சியினரின் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ள இன்று அனைத்து அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் மத்திய அரசு சார்ப்பில் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் ஆப்கனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது குறித்தும், அந்நாட்டின் தற்போதைய சூழல் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

ஆப்கன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாடு, இந்தியா எதிர்கொள்ள உள்ள சவால்கள் குறித்து வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ் சிங்ளா விளக்குகிறார். இந்த கூட்டத்தில் திமுக சார்பில் திருச்சி சிவா, டி.ஆர்.பாலூ ஆகியோரும், விசிக சார்பில் திருமாவளவனும் பங்கேற்றுள்ளனர். முன்னதாக ஆகஸ்ட் 31க்குள் அமெரிக்க படைகள் ஆப்கனிலிருந்து வெளியேறும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு!

Saravana Kumar

ஜெயம் ரவி ஹீரோயினுக்கு கொரோனா பாதிப்பு!

Halley karthi

நாடு முழுவதும் ஒரே நாளில் 1,206 பேர் உயிரிழப்பு

Halley karthi