தமிழ்நாட்டில் நவம்பர் 12 முதல் டிசம்பர் 11 வரை வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக, வருகின்ற அக்டோபர் 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தலைமைச் செயலகத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட 13 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
SIR பணிகள் தொடர்பான ஆனைத்துக்கட்சிக் கூட்டம் வரும் 23 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
SIR-ஐ தெரித்தும், SIR விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரியும் நாடுமுழுவதும் கரப்பான்பூச்சி கட்சியினர். இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த அனைத்துக்கட்சிக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.




