தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமைடைந்து வரும் நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு தொடக்க விழாவை முதலமைச்சர் விஜய் தொடங்கிவைத்தார். இதனைத்தொடர்ந்து மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு குறித்த ‘துளி’ இலச்சினையையும் (logo) அறிமுகம் செய்து வைத்தார்.
முன்னதாக மழை நீர் சேமிப்பு கட்டிட மாதிரிகள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு அதிகாரிகள் விளக்கி கூறினர். இதனைத்தொடர்ந்து மழை நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு வீடியோவை முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுணா உள்ளிட்டோருடன் இணைந்து வெளியிட்டார். அப்போது ‘மழை நீர் சேமிப்பு முக்கியம் மக்களே’ என்ற விழிப்புணர்வு வீடியோ பிரம்மாணடமான LED திரையில் ஒளிபரப்பப்பட்டது.




