நூலகங்களை இன்று முதல் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நூலகங்களையும் இன்று முதல் திறக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, பொது நூலகத் துறையின் கீழ் இயங்கும் அனைத்து நூலகங்களும் இன்று முதல் திறக்க தமிழ்நாடு…

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நூலகங்களையும் இன்று முதல் திறக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, பொது நூலகத் துறையின் கீழ் இயங்கும் அனைத்து நூலகங்களும் இன்று முதல் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும், மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இதுதொடர்பான செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து, அரசு அலுவலகங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன், செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூலகங்களை திறக்க, வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் மூலம் கோரிக்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டதால் போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் மற்றும் வாசகர்களின் நலனை கருத்தில்கொண்டு, இன்று முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதியில் செயல்படும் நூலகங்களைத் தவிர்த்து, மற்ற அனைத்து நூலகங்களும் இயங்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.