முக்கியச் செய்திகள் தமிழகம்

“ஜாதி, மதம் ஏதுமில்லை”- மதுரை ஆதீனத்துக்கு விஜய் ரசிகர்கள் பதிலடி

மதுரை ஆதீனத்தை கண்டித்து மதுரை முழுவதும்  விஜய் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்த “துள்ளாத மனமும் துள்ளும்” திரைப்படத்தில் விநாயக கடவுளை கேலியாக பேசியதாகவும், இதனால் நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தை யாரும் பார்க்க கூடாது என்றும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடைபெற்ற துறவியர் மாநாட்டில் மதுரை 293வது ஆதீனம் பேசியிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மதுரை ஆதீனத்தின் இந்த பேச்சு, விஜய் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.  மதுரை ஆதீனத்தின் பேச்சை கண்டித்து மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதுரை மாநகர் முழுவதிலும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.


அந்த சுவரொட்டிகளில், “எச்சரிக்கை… மதுரை ஆதீனம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடுறீங்களேயப்பா! நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாமா தப்பா” என்ற வாசகங்களோடு “வீண் விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்து, எங்களுக்கு ஜாதி மதம் எதுமில்லை, தளபதி மேல் மக்கள் கொண்ட அன்புக்கு வானமே எல்லை” என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளது.

மதுரை ஆதீனத்தின் பேச்சுக்கு எதிரான விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை  ஆதீனம் ஏற்கனவே அரசியல் ரதீயாக பேசிய கருத்துகள் பேசுபொருளாகிய நிலையில் தற்போது விஜய் ரசிகர்கள் மற்றும் மதுரை ஆதீனம் இருவர்களிடையேயான போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க – முந்தைய செய்தி –

நடிகர் விஜய் படங்களை பார்க்காதீர்கள்: மதுரை ஆதீனம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒருமை இல்லை அது உரிமை – கே.என்.நேரு பேச்சு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மேயர் பிரியா

Web Editor

திமுக எம்.எல்.ஏ எப்படி வரலாம்; மேடையில் அதிமுக எம்.எல்.ஏ வாக்குவாதம்

Web Editor

வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை – அண்ணாமலை

Halley Karthik