விடாமுயற்சி பட பணிகள் துவங்கியுள்ள நிலையில், தல அஜித் ஸ்டண்ட் செய்யும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இந்த படப்பிடிப்பின் போது அஜித்தும், ஆரவ்வும் விபத்தில் சிக்கி உயிர்பிழைத்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இந்தப் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனையடுத்து ஜூன் மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனவும், இன்னும் 20-30% படப்பிடிப்பே மீதமுள்ளது எனவும் இந்த படத்தில் நடித்து வரும் நடிகர் அர்ஜூன் தெரிவித்தார்.
இதனையடுத்து விடாமுயற்சி படப்பிடிப்புக்காக மீண்டும் அஜர்பைஜான் செல்வதற்கு முன், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, விடாமுயற்சி திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவித்தார்.
The big update #vidaamuyarchi shoot resumes #Azerbaijan.
#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran@trishtrashers @akarjunofficial@anirudhofficial @ReginaCassandra @Aravoffl #OmPrakash @DoneChannel1 @vidaamuyarchii
@gopiprasannaa pic.twitter.com/pQ33FDUXCS— Suresh Chandra (@SureshChandraa) June 24, 2024
விடாமுயற்சி படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், நடிகர் ஆரவுடன் இணைந்து தல அஜித், புதிய ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடிக்கும் வீடியோவை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன.







