புதுச்சேரியில் விமான நிலைய பராமரிப்பு பணி காரணமாக ஜூலை 2-ம் தேதி வரை அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேயில் இருந்து ஐதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாள்தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வருகிற ஜூலை 2-ம் தேதி வரை விமான சேவை தற்காலிமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய பராமரிப்பு பணி காரணமாக புதுச்சேரியில் இருந்து ஐதராபாத் மற்றும் பெங்களூரு செல்லும் விமானங்களை ஜூலை 2-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் ஜூலை 3-ம் தேதியிலிருந்து அவை மீண்டும் இயக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. விமான சேவை திடீரென்று ரத்து செய்யப்படுவதால் விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.







