டெல்லியில் காற்றின் திசை மாறுபட்டால் காற்றின் தரம் சற்று மேம்பட்டுள்ளதாக அந்த மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
”டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது”- அமைச்சர் கோபால் ராய்
டெல்லியில் காற்றின் திசை மாறுபட்டால் காற்றின் தரம் சற்று மேம்பட்டுள்ளதாக அந்த மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில்…
கடந்த சில வாரங்களாக டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. பல நாள்களாக காற்றின் தரக் குறியீடு 400 புள்ளிகளுக்கு மேல் சென்று ‘கடுமை’ பிரிவில் நீடித்து வந்தது.
இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் கோபால் ராய் கூறியதாவது:
டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தீபாவளி பண்டிகையின்போது காற்றின் தரம் ‘கடுமை’ பிரிவில் இருந்து வந்தது. தற்போது காற்றின் திசை மாறியுள்ளது. இதனால் காற்றின் தரம் சற்று மேம்பட்டுள்ளது. காற்றின் தரக் குறியீடு 335 ஆக உள்ளது. மேலும் சில நேர்மறையான விஷயங்களை எதிர்பார்க்கிறோம். நிலைமை சீக்கிரம் சரியானால் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.






