கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பிலிருந்து திருவனந்தபுரம் சென்ற அய்யா வைகுண்டர் தீபத்திற்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.
அய்யாவழி மக்களால் போற்றி வணங்கப்படும் வைகுண்டர் மனிதனாக பிறந்த 214-வது ஆண்டை, பெரிய அளவில் திருவனந்தபுரத்தில் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து அய்யா வைகுண்டரின் தீபம் ஒன்று தலைமை பதியான சாமி தோப்புக்கு சென்று, பின்னர் மீண்டும் அந்த தீபம் வாகனம் மூலமாக பொதுமக்களின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டு திருவனந்தபுரம் சென்றடைந்தது.
சாந்தோப்பில் இருந்து புறப்பட்ட இந்த தீபத்திற்கு, நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அய்யாவழி மக்கள் உட்பட பல்வேறு தரப்பினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
–சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: