வந்தே பாரத் திட்டத்தின் கீழ், மாலத்தீவில் இருந்து திருச்சி வந்த முதல் விமானத்திற்கு, வாட்டர் சல்யூட் அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகள் இன்னும் விமானங்களை மற்ற நாடுகளுக்கு அதிகமாக இயக்கவில்லை.
இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்கு வந்தே பாரத் திட்டத்தின் கீழ், சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மாலத்தீவில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று வந்தது. 146 பயணிகளுடன் வந்த விமானத்திற்கு, வரவுற்பளிக்கும் விதமாக, திருச்சி விமான நிலையம் சார்பில் வாட்டர் சல்யூட் அளிக்கப்பட்டது. மேலும் பயணிகளுக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.







