முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

டிவி விவாதங்களில் அதிமுக இனி பங்கேற்காது: ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை

தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுக நிர்வாகிகள் இனி பங்கேற்க மாட்டார்கள் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

இதுபற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மக்களின் அடிப்படைத் தேவைகள், தினசரி பிரச்னைகள் பல இருக்கின்றபோது, அதைப்பற்றி எல்லாம் சிறிதளவும் கவலைப்படாமல், ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாக இருக்கக் கூடிய ஊடக நிறுவனங்கள், அதிமுக-வின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் சிறுமைப்படுத்தும் நோக்கிலும் மனம்போன போக்கில் ஊடக அறத்திற்குப் புறம்பாகவும் கழகத் தலைவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்ற விதத்திலும், விவாத தலைப்புகளை வைத்து நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவது வருத்தத்தையும் வேதனையையும் அளிக்கிறது.

மேற்சொன்ன காரணங்களால், ஊடக விவாதங்களில் அதிமுக சார்பில் கழக நிர்வாகிகளோ, செய்தித் தொடர்பாளர்களோ, கழகத்தைச் சார்ந்தவர்களோ யாரும் இனி பங்கேற்க மாட்டார் கள் என்பதையும் எங்களை பிரதிநிதிப்படுத்துவதாகக் கூறிகொண்டு யாரையும் வைத்து பேசுவதை நிறுத்துமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கழகத்தின் பெயரை வேறு எந்த வகையிலும் பிரதிபலிக்கும்படி யாரையும் தங்கள் ஊடக வழி யாக கருத்துகளை தெரிவிக்க அழைக்கவோ, அனுமதிக்கவோ வேண்டாம் என்றும் வேறு யாரையும் அழைத்து அவர்களை அதிமுக என்று அடையாளப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

கண்ணை இமை காப்பது போல, விவசாயிகளை அதிமுக அரசு காத்துவருகிறது: முதல்வர்!

Gayathri Venkatesan

மழைநீரில் மூழ்கிய மக்காச்சோளம்; ரூ.1 கோடி நஷ்டத்தால் விவசாயிகள் வேதனை!

Jayapriya

யூரோ கோப்பை கால்பந்து தொடர்: ரஷ்யா, வேல்ஸ், இத்தாலி அணிகள் அபார வெற்றி!

Vandhana