அதிமுகவில் சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு, எஸ்.பி. வேலுமணி & சி.வி. சண்முகம் தரப்பு என இரு அணிகளாக கட்சி பிரிந்தது. மேலும் எஸ்.பி. வேலுமணி தரப்பு சட்டமன்றத்தில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் எதிர் தரப்பு மாவட்ட செயலாளர்களை இபிஎஸ் பதவி நீக்கம் செய்தார்.
இதற்கிடையில் இன்று எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏ-க்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இது தொடர்பாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாக்கரை சந்தித்த அவர்கள் தஙகள் ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.
இந்த நிலையில் ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணந்துள்ளனர். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.




