நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 48 ஆவது லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. டெல்லி அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டி இன்று இரவு 7 : 30 மணிக்கு தொடங்குகிறது.
நடப்புத் தொடரில் 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி அணி, 4 வெற்றி மற்றும் 5 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
மறுபுறம் சென்னை அணி 9 ஆட்டங்களில் 4 வெற்றி, 5 தோல்விகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.
முன்னதாக இந்த சீசனின் 18 ஆவது லீக் போட்டியில் இரு அணிகளும் மோதின. அப்போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றி பெற்றிருந்தது.
சென்னை மற்றும் டெல்லி அணிகள் 9 போட்டிகளில் 4 வெற்றி என சமநிலையில் உள்ளன. இதனால் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று எந்த அணி 5 ஆவது வெற்றியை பதிவு செய்வார்கள் என்பதும் ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைப்பார்கள் என்பதும் முகுந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.







