கடந்த ஆட்சியின் ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிப்பட்டு வரும் நிலையில், குற்றத்தை மறைப்பதற்காக, குழப்பத்தை ஏற்படுத்த அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் திமுக வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுகவை அனைத்து மக்களும் ஏற்றுக் கொண்டு கட்சியில் இணைந்து வருகின்றனர் என்றார். அதிமுகவினரின் ஆர்ப்பாட்டம் குறித்து பதிலளித்த அமைச்சர், கட்சியைக் கைப்பற்றுவதிலும் கொள்ளையடிப்பதிலும் அதிமுக விற்குள்ளேயே ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது என்றார்.
கடந்த ஆட்சியில் அமைச்சர்கள் செய்த ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிப்பட்டு வரும் நிலையில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி குற்றத்தை மறைப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.