சென்னை-புதுச்சேரி இடையிலான வர்த்தக கப்பல் போக்குவரத்து தொடக்கம்!

சென்னை-புதுச்சேரி இடையே வர்த்தக கப்பல் போக்குவரத்து இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.  சென்னை – புதுச்சேரி வர்த்தக சரக்கு போக்குவரத்து கப்பல் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதனை சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் கொடி…

சென்னை-புதுச்சேரி இடையே வர்த்தக கப்பல் போக்குவரத்து இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. 

சென்னை – புதுச்சேரி வர்த்தக சரக்கு போக்குவரத்து கப்பல் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதனை சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய ஏதுவாக புதுச்சேரி துறைமுகத்திற்கு சரக்கு பெட்டகங்களை கொண்டு சென்று அங்கிருந்து சிறிய சரக்கு கப்பல்கள் மூலம் சென்னை துறைமுகம் கொண்டு வந்து வெளிநாடுகளுக்கு பெரிய கப்பல்களில் கொண்டு செல்ல ஏதுவாக இப்போக்குவரத்து பயன்படும்.

இதையும் படிக்கவும்: 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்- கே.எஸ்.தென்னரசு

அதே போல் இறக்குமதியாகும் சரக்கு பெட்டகங்களை தமிழ்நாட்டிற்குள் கொண்டு செல்ல இப்போக்குவரத்தை பயன்படுத்தப்பட உள்ளது. மதுரவாயில் ஈரடுக்கு மேம்பால பணிகள் தொய்வில் உள்ளதால் இது ஒரு வகையான மாற்று வழி என கூறப்படுகிறது. புதுச்சேரி துறைமுகம், கடந்த ஐந்தாண்டுகளில் ஐந்து மீட்டர் ஆழத்திற்கு கடல் ஆழப்படுத்தபட்டதன் மூலம் இச்சேவை சாத்தியமானது.சென்னை துறைமுகம் பெரிய கப்பல்கள் இயக்க ஏதுவாக 16 மீட்டர் ஆழம் கொண்ட துறைமுகமாக உள்ளது. சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு சரக்கு கப்பல் 8 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரத்தில் சென்றடையும். வாரத்திற்கு இரண்டு முறை போக்கு வரத்து இயக்கப்பட உள்ளது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுனில் பயில்வால், சென்னை மற்றும் புதுச்சேரி இடையில் சரக்கு பெட்டக சேவை இன்று முதல் தொடங்கவுள்ளது. 2017ம் ஆண்டு புதுச்சேரி அரசு மற்றும் தமிழ்நாடு அரசு இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த சரக்கு பெட்டகங்களை எடுத்துச் செல்ல போக்குவரத்து சேவை பணிகள் முடிக்கப்பட்டு சேவை தொடங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

திருச்சி மற்றும் சுற்று வட்டார மாவட்டங்கள் தொழிற்சாலைகள் நிறைந்த இடங்களாக உள்ளன. சரக்கு பெட்டகங்கள் புதுச்சேரிக்கு கொண்டு செல்வதன் மூலம் நேரம் மற்றும் மாசு குறைக்கப்படுகிறது என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.