அதிமுக பொதுக்குழு விவகாரத்தை மீண்டும் உயர்நீதிமன்றத்துக்கே திருப்பி அனுப்பியது உச்சநீதிமன்றம்.
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வ ம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், “கட்சியின் அடிப்படை விதிகள் மொத்தமும் மீறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சிவில் சூட் வழக்குகள் முறையாக பரிசீலனை செய்யப்படவில்லை” என்று குற்றம்சாட்டப்பட்டது.
பொதுக்குழு விவகாரத்தில் என்ன விதி மீறல் நடந்துள்ளது என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு, ஓபிஎஸ் தரப்பு, “பொதுக்குழுவே சட்டவிரோதம், ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழுவை நடத்த முடியாது. முக்கிய அத்தனை முடிவுகளும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்டது. என்னைக் கட்சியில் இருந்தே நீக்கியுள்ளனர்” என்று வாதத்தினை முன்வைத்தது.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நாங்கள் அனைத்து விவகாரத்தையும் restore செய்ய உத்தரவிட முடியாது. ஆனால், தற்போதைய நிலை தொடர வேண்டும் என்ற (status quo) உத்தரவை பிறப்பிக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர். அவ்வாறு status quo பிறப்பிப்பதாக இருந்தால் ஜூலை 11க்கு முன்பு உள்ள நிலை தொடர வேண்டும் என உத்தரவிட வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பு கேட்டுக்கொண்டது.
இறுதியாக அதிமுக பொதுக்குழு விவகாரத்தை மீண்டும் உயர்நீதிமன்றத்துக்கே விசாரணைக்காக திரும்ப அனுப்புகிறோம், இந்த விவகாரத்தில் 3 வாரத்தில் விசாரித்து முடிக்க உத்தரவிடுகிறோம், அதுவரை தற்போதைய நிலையே தொடர வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: