அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் உட்கட்சி பூசலை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கடந்த 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இரு தரப்பினரது வாதங்களும் நேற்று நிறைவுற்றது. இதையடுத்து இந்த வழக்கிற்கான தீர்ப்பு நாளை காலை 9 மணிக்கு வழங்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நாளை காலை 9 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்பட உள்ள நிலையில் பொதுக்குழு கூட்டம் 9.15 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பொதுக்குழு நடைபெற உள்ள இடத்தை அதிமுக நிர்வாகிகள் மேற்பார்வை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ.பன்னீர்செல்ம் ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை மேற்கொடு வருகின்றனர். சென்னை கிரீன் வேஸ் சாலையிலுள்ள ஓபிஎஸ் இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோருடன் ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார்.
இதேபோல் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, காமராஜ் உள்ளிட்டோருடன் நாளை வெளியாகவுள்ள நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அதிமுக பொதுகுழு கூட்டம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.
ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், நீதிமன்ற தீர்ப்பை மதிப்போம். இன்று வரை ஒ.பி.எஸ் தான் ஒருங்கிணைப்பாளர், இனியும் அவர் தான் ஒருங்கிணைப்பாளராக இருப்பார். 2,600 பேரால் எதுவும் செய்ய முடியாது. ஒன்றரை கோடி தொண்டர்களால் முடிவு செய்யப்பட்டவர் தான் ஓபிஎஸ்