அதிமுக பொதுக்குழுவில் தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக, அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறி உள்ளார்.
கோவில்பட்டியில் ஆயிரத்து 903 மாணவ மாணவியருக்கு, அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதல் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, கிராம சபை கூட்டம் என்ற பெயரில் திமுகவினர் அரசியல் செய்வதாக விமர்சித்தார். திமுகவினர் பதவி வெறியில் இருப்பதாகவும், அவர் குறை கூறினார்.
வழக்கமாக டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய பொதுக்குழு, கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, ஜனவரியில் நடப்பதாக கூறினார். விரைவில் தேர்தல் வரவிருப்பதால் கூட்டணி, வெற்றி வாய்ப்புகள் குறித்து, இன்றைய பொதுக்குழுவில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.







