மேற்கு வங்கத்தில் திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி; முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!

மேற்கு வங்க மாநிலத்தில், திரையரங்குகள் 100 சதவிகித இருக்கைகளுடன் செயல்பட முதலமைச்சர் மம்தா பானர்ஜி அனுமதி அளித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் நபானா பகுதியில், காணொலி மூலம் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் முதல்வர் மம்தா…

மேற்கு வங்க மாநிலத்தில், திரையரங்குகள் 100 சதவிகித இருக்கைகளுடன் செயல்பட முதலமைச்சர் மம்தா பானர்ஜி அனுமதி அளித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் நபானா பகுதியில், காணொலி மூலம் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஆகியோர் கலந்து கொண்டு, விழாவை துவக்கி வைத்தனர். தொடர்ந்து பேசிய முதல்வர் மம்தா, மேற்கு வங்ககத்தில் திரையரங்குகள் 50 சதவிகிதத்திலிருந்து, இனி 100 சதவிகித இருக்கைகளை பயன்படுத்த அனுமதி வழங்குவதாகவும், ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்றிட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply