அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை; வழக்கு தள்ளுபடி

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை விதிக்கக்கோரித் தாக்கல் செய்த வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக-வின் அடிமட்ட தொண்டர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வகையிலிருந்த அதிகாரமிக்க பொதுச் செயலாளர் பதவியைக் கலைத்துவிட்டு, முறையாகத்…

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை விதிக்கக்கோரித் தாக்கல் செய்த வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக-வின் அடிமட்ட தொண்டர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வகையிலிருந்த அதிகாரமிக்க பொதுச் செயலாளர் பதவியைக் கலைத்துவிட்டு, முறையாகத் தேர்தல் நடைமுறைகளைக் கையாளாமல் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது எனக்கூறி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரிய மூர்த்தி என்பவர் 23வது உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நிலுவையிலிருந்த நிலையில், ஜூன் 23-ல் பொதுக்குழுக் கூட்டம் நடத்தத் தடை விதிக்கக் கோரிய கூடுதல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பின்னர் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், ஜூலை 11ஆம் தேதி அடுத்த பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அண்மைச் செய்தி: ‘’இயக்குநர் மணிரத்தினம் ஒரு ஷாட்டுக்கு எவ்வளவு கஷ்டப் பட்டார் என எங்களுக்குத் தான் தெரியும்’ – நடிகர் ஜெயம் ரவி’

கட்சி நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவும் வரும் 11-ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால், அக்கூட்டத்தை நடத்த ஒ.பி எஸ்., இ.பி.எஸ். ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டுமெனப் புதிதாகக் கூடுதல் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு சென்னை 23வது உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி தாமோதரன் முன்பு, விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிச்சாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மனுதாரர் கட்சியின் உறுப்பினர் இல்லை என்பதால் இந்த வழக்கைத் தாக்கல் செய்ய உரிமை இல்லை என தெரிவிக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் செல்லாது எனக் கூறும் மனுதாரர், பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குத் தான் அதிகாரம் உள்ளது முரண்பாடாகத் தெரிவித்துள்ளதால் இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து பொதுக்குழுவுக்குத் தடை கோரிய சூரிய மூர்த்தி மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.