முக்கியச் செய்திகள் தமிழகம்

‘வேண்டாம் போதை’ விழிப்புணர்வு முக்கியத்துவம் வாய்ந்தது- ஓசூர் மேயர் பாராட்டு

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி அன்பு பாலம் அமைப்புடன் இணைந்து நடத்தும் ‘வேண்டாம் போதை’ முக்கியதுவம் வாய்ந்த ஒன்று என ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா பாராட்டினார்.

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி பொறுப்பும், பொதுநலமும் சார்ந்த செய்திகளை
தொடர்ந்து அன்பு பாலம் மூலம் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளையும்
ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலம் இந்த
மாதம் முழுவதும் ‘வேண்டாம் போதை‘ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறது. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியுடன் டிஜிட்டல் பார்ட்னராக daily hunt ம் இணைந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ‘வேண்டாம் போதை’ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா கலந்து கொண்டு மாணவர்களுடன் ‘வேண்டாம் போதை’ என்ற உறுதிமொழியும் மற்றும் போதை பற்றிய விழிப்புணர்வு உரையையும் வழங்கினார்.

அப்போது பேசிய அவர், பெண் குழந்தைகள் மத்தியில் நடத்தப்பட்ட ‘வேண்டாம் போதை’ விழிப்புணர்வு நிகழ்ச்சி நல்லதொரு முன்னெடுப்பு என பாராட்டினார். மேலும், இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் குடும்பத்தினருக்கு விழிப்புணர்வை கொண்டு சேர்க்க முடியும் என்றும், நியூஸ்7 தமிழ் முன்னெடுத்துள்ள இந்த நிகழ்ச்சியை அனைத்து பள்ளிகளிலும் நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஓசூர் நகர உதவி காவல் ஆய்வாளர் சித்திக், குணம் மருத்துவமனை மருத்துவர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் லதா மற்றும் 2200 மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: பரமக்குடியில் 6,000 போலீசார் குவிப்பு

EZHILARASAN D

ரயில்வே பாதுகாப்புப் படை பெண் காவலருக்கு கத்திக்குத்து!

Web Editor

யாரை துணைப் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யவுள்ளது திமுக தலைமை?

G SaravanaKumar