’ஒரு ஷாட்டுக்கு எவ்வளவு கஷ்டப் பட்டார் என எங்களுக்குத் தான் தெரியும்’

இயக்குநர் மணிரத்தினம் ஒரு ஷாட்டுக்கு எவ்வளவு கஷ்டப் பட்டார் என எங்களுக்குத் தான் தெரியும் என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சி…

இயக்குநர் மணிரத்தினம் ஒரு ஷாட்டுக்கு எவ்வளவு கஷ்டப் பட்டார் என எங்களுக்குத் தான் தெரியும் என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழில் நடிகர் சூர்யா, தெலுங்கில் மகேஷ்பாபு, கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி, மலையாளத்தில் மோகன்லால், மற்றும் ஹிந்தியில் அமிதாப்பச்சன் ஆகியோர் டீசரை வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில், பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய நடிகர் ஜெயம் ரவி, இயக்குநர் மணிரத்தினத்தைத் தான் ஒரு முறை சந்தித்தபோது, அவர் தன்னிடம் பொன்னியின் செல்வன் படம் பண்ணப் போவதாகக் கூறியதாகவும், அதற்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது, எல்லோரும் அதைத் தான் எதிர்பார்க்கிறார்கள் என்று சொன்னதாகக் கூறினார்.

அண்மைச் செய்தி: ’’இன்று வரை தமிழ்நாடு அரசு கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் சோழர்கள் வகுத்தது’ – நடிகர் கார்த்தி’

தொடர்ந்து பேசிய அவர், நீ ஏன் சந்தோசப்படவில்லை எனக் கேட்டதாகவும், ‘நீ தான் பொன்னியின் செல்வம்’ எனக் கூறியதாகக் குறிப்பிட்டுப் பேசினார். மேலும், இந்த படத்தின் டீசரை பார்த்து தனக்குப் புல்லரித்ததை விட அவர், நீதான் பொன்னியின் செல்வம் எனச் சொல்லியதுதான் புல்லரிப்பை ஏற்படுத்தியது எனக் கூறினார். ஒரு ஷாட்டுக்கு எவ்வளவு கஷ்டப் பட்டார் என எங்களுக்குத் தான் தெரியும் எனக் கூறிய அவர், ஒரு ஷாட்டுக்கு 1 மாதம் கூட கஷ்டப் படுவார், அவ்வளவு உழைப்பு அவருக்குள் இருந்தது எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.