ஷின்சோ அபேவை கொலை செய்தது ஏன்? – கொலையாளி வாக்குமூலம்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று காலை அந்நாட்டின் நாரா நகரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அதற்கான காரணத்தை கொலையாளி வாக்குமூலமாக அளித்துள்ளார்.  ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள நாரா நகரில் ஷின்சோ அபே…

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று காலை அந்நாட்டின் நாரா நகரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அதற்கான காரணத்தை கொலையாளி வாக்குமூலமாக அளித்துள்ளார். 

ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள நாரா நகரில் ஷின்சோ அபே தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தபோது அவரை, டெட்சுயா யமகாமி என்பவர் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.

அந்நாட்டு நேரப்படி காலை 11.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.

கொலையாளி டெட்சுயா யமகாமி பிரச்சாரம் நடந்த நாரா நகரைச் சேர்ந்தவர் என்பதும், ஷின்சோ அபே மீது அதிருப்தியில் இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

ஷின்சோ அபேவை சுட்டுக்கொன்ற பிறகு டெட்சுயா யமகாமி அங்கிருந்து தப்பி ஓட முயலவில்லை. அவரை உடனடியாக கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜப்பான் கடற்படையில் தற்காப்பு பிரிவில் 2005 வரை 3 ஆண்டுகள் டெட்சுயா யமகாமி பணியாற்றியுள்ளார். ஷின்சோ அபேவின் கொள்கைகள் காரணமாக அவர் மீது மிகுந்த அதிருப்தியில் இருந்ததாகவும் எனவே அவரை தனது சொந்த துப்பாக்கி கொண்டு சுட்டுக்கொன்றதாகவும் டெட்சுயா யமகாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.