அதிமுக பொதுக்குழு பேனரில் இடம் பெறாத ஓபிஎஸ் படம்

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு வைக்கப்பட்ட வரவேற்பு பேனர்களில் ஒபிஎஸ் புகைப்படம் இடம்பெறாதது அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்காக சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் கடந்த சில நாட்களாக…

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு வைக்கப்பட்ட வரவேற்பு பேனர்களில் ஒபிஎஸ்
புகைப்படம் இடம்பெறாதது அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்காக சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண
மண்டபத்தில் கடந்த சில நாட்களாக முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் சாலையின் இருபுறங்களில் இருந்து பொதுக்குழு நடைபெறக்கூடிய திருமண மண்டபம் வரை சுமார் 100க்கும் மேற்பட்ட வரவேற்பு பேனர்கள் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சாலையின் ஓரங்களில் இருந்து மண்டபம் வரை வைக்கக் கூடிய எந்த ஒரு பேனர்களிலும் ஓபிஎஸ் புகைப்படம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் தனித்தனியாக இருப்பது போன்ற பேனர்கள் சாலையின் வழி நெடுகிலும் வைக்கப்பட்டுள்ள ஓபிஎஸ்யின் புகைப்படம் மட்டும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த முறை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் , இபிஎஸ் இருவரும்
இணைந்து ஒருவருக்கொருவர் பூங்கொத்து கொடுக்கும் படியாக பேனர்கள்
வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த முறை நடைபெறக்கூடிய பொதுக்குழுவிற்காக
வைக்கப்பட்டிருந்த பேனர்களில் ஓபிஎஸ் புகைபடம் இல்லாதது அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.