முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ நடத்திய சோதனைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்,அழகிரியிடம் இந்த சோதனை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ப. சிதம்பரம் வீட்டில் எத்தனை முறைதான் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்துவார்கள் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். சிபிஐ க்கு வேறு எந்த வேலையும் இல்லை என்றால் ப.சிதம்பரம் வீட்டுக்கு சோதனை செய்ய வந்து விடுகிறார்கள் என்றும் கே.எஸ்.அழகிரி விமர்சித்தார்
மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உதவியுடன் அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத்ஷிண்ட ஆட்சியை பிடித்தது நாடெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டிலும் ஏக்நாத் ஷிண்டே உருவாவார் என்றார். ஏக்நாத் ஷிண்டே அதே பெயரில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை வேறு பெயரிலும் இருக்கலாம் என்றும் அவர் கூறினார். இந்நிலையில் அவரது கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய கே.எஸ்.அழகிரி, மகாராஷ்டிராவில் ஏக்நாத்ஷிண்டாவால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது போல் தமிழ்நாட்டில் நிகழ வாய்ப்பு இல்லை என்று கூறினார். தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வலுவாக உள்ளதாகவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
.







