ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் வாழ்நாள் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வாழ்நாள் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இக்கட்சியை ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 2011ம் ஆண்டு நிறுவினார். அவரது தாயாரான…

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வாழ்நாள் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இக்கட்சியை ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 2011ம் ஆண்டு நிறுவினார். அவரது தாயாரான விஜயம்ம அக்கட்சியின் கௌரவ தலைவராக இருந்து வந்தார். தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆந்திராவில் கடந்த 2019ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 175 தொகுதிகளை கொண்ட ஆந்திர சட்டசபையில் ஆட்சி அமைக்க 88 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை. இத்தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 151 இடங்களில் வெற்றி பெற்று இமாலய வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. இதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநில முதல்வராக பொறுப்பேற்று மிகப்பெரும் தலைவராக மாறினார்.

இந்நிலையில் இக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடந்த 2 நாட்களாக நடந்தது. கூட்டத்தின் நிறைவு நாளான இன்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கௌரவ தலைவராக இருந்த விஜயம்மா அவரின் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து அக்கட்சியின் வாழ்நாள் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பேற்றுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.