அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம் அதிமுகவில் இருந்து விலகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
தோப்பு வெங்கடாசலம் தலைமையில் மேலும் 900 பேர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இதனைதொடர்ந்து பேசிய தோப்பு வெங்கடாசலம், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினரை திமுகவில் இணைக்க முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் கடந்த பத்து ஆண்டுகள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக தோப்பு வெங்கடாசலம் இருந்து வந்துள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட அவருக்கு இந்த முறை தலைமை சீட்டு வழங்காததால், அவர் தன் ஆதரவாளர்களுடன் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







