பொதுக்குழுவுக்கு வாருங்கள் ஓபிஎஸை அழைக்கும் இபிஎஸ்

பிரச்னையை பேசித் தீர்த்துக்கொள்ளலாம், பொதுக்குழுவுக்கு வாருங்கள் என ஓபிஎஸ்ஸுக்கு இபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒற்றைத்…

பிரச்னையை பேசித் தீர்த்துக்கொள்ளலாம், பொதுக்குழுவுக்கு வாருங்கள் என ஓபிஎஸ்ஸுக்கு இபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி வர வேண்டுமென பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளதால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு என்ன முடிவெடுப்பது என்பது குறித்து ஆலோசித்து வருகிறது. தற்போது ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் செல்ல தயாராக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், பொதுக்குழுவுக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார். கடிதத்தில், “ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் இருவரும் இணைந்து பொதுக்குழுவில் பங்கேற்போம். எந்த பிரச்னையாக இருந்தாலும் பொதுக்குழுவில் பேசி தீர்த்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அளவுக்கு அசாதாரண சூழல் நிலவவில்லை, திட்டமிட்டபடி செயற்குழு – பொதுக்குழு நடைபெறும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எனினும் பதில் கடிதத்தில் ஒற்றைத் தலைமை குறித்த எந்த தகவலும் இடம்பெறவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.