முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுக ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை: இபிஎஸ்

முதலமைச்சர் சாதனை பட்டியலை வெளியிட்டுள்ளார், மக்களோ வேதனை பட்டியலை வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், சட்டமன்றத்தில் திமுகவின் சாதனைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளவில்லை. எதிர்க்கட்சி தலைவர் அறையில் ஆலோசனையில் ஈடுபட்டுவிட்டு திரும்பிச் சென்றனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக பொய்யான விளம்பரம் செய்கின்றனர், சட்டம் – ஒழுங்கு முழுமையாக கெட்டுவிட்டது, அதிமுக ஆட்சிக் காலத்திலான திட்டங்களில் முடிவுற்றதைத்தான் திறப்பு விழா காண்கிறார், எந்த ஒரு பெரிய திட்டமும் திமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்படவில்லை” என்று குற்றம்சாட்டினார்.ஒராண்டில் மக்களுக்கு வேதனைதான் மிச்சம் என்ற எடப்பாடி பழனிசாமி, “ஸ்டாலின் சாதனை பட்டியலை வெளியிட்டுள்ளார். மக்கள் வேதனை பட்டியலை வெளியிட்டுள்ளனர். யானைக்கு சோளப்பொறி போடுவதுபோல் இன்று அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின். சொத்து வரியை உயர்த்தி பிள்ளையார் சுழி போட்டுள்ளனர். ஒவ்வொன்றாக உயர்த்துவார்கள். பேருந்து கட்டணம் எவ்வளவு உயர்த்துகிறார்கள் என பார்க்கலாம்” என்று தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் பழுது; அரசியல் கட்சியினர் போராட்டம்

Saravana Kumar

புறநகர் ரயில்களில் நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதியில்லை!

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமனம்

Ezhilarasan