முக்கியச் செய்திகள் தமிழகம்

இந்திய மாடலின் ஓர் அங்கம்தான் திராவிட மாடல்: வானதி சீனிவாசன்

திராவிட மாடல் என்பது இந்திய மாடலின் ஓர் அங்கம்தான் என்று பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பேசியதற்கு நன்றி தெரிவித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், திமுக அரசின் ஓராண்டு நிறைவுக்கு பாஜக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வளர்ச்சியையும் இந்தியாவின் வளர்ச்சியாக பார்க்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கருத்துக்கேற்ப தமிழ்நாடு அரசின் ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு பாஜக தனது ஒத்துழைப்பைத் தருவதாகவும், அதை வேகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பாஜக எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு பிரதமரும், மத்திய அரசும் வழங்கிய திட்டங்கள் பற்றி வானதி சீனிவாசன் பேச முற்பட்ட போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, அவை மாண்புக்கு உட்பட்டு 110 விதியின் கீழ் விவாதம் நடத்த அனுமதிக்க முடியாது என்றும், நன்றி தெரிவித்து மட்டும் பேசுமாறும், மத்திய அரசு பற்றி பேச வரும் 9ம் தேதி வாய்ப்பு தருவதாகவும் கூறினார்.

பின்னர் பேச்சைத் தொடர்ந்த வானதி, திராவிட மாடல் என்ற வார்த்தையை முதலமைச்சர் பயன்படுத்துவதாகவும், திராவிட மாடல் என்றால் அது தமிழ்நாடு உட்பட ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் உள்ளடக்கியதுதான் என்றும், திராவிட மாடல் என்பது இந்திய மாடலின் ஓர் அங்கம்தான் என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“தமிழக மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும்”- வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

Web Editor

விக்ரமில் ஒன்றிணையும் உச்சநட்சத்திரங்கள்!

Vel Prasanth

விஜய் ஜோடியாக நடிக்கிறாரா? கீர்த்தி சுரேஷ் பரபரப்பு

EZHILARASAN D