முக்கியச் செய்திகள் தமிழகம்

ஓராண்டில் கடலளவு சாதனைகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து சட்டப்பேரவையில் இன்று உரை நிகழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஓராண்டில் கடலளவு சாதனைகளை தனது தலைமையிலான அரசு புரிந்திருப்பதாக தெரிவித்தார்.

அவரது உரையை தற்போது பார்ப்போம்:

நான் முதலமைச்சராக பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. ஓராண்டு காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையுடனும் உளச்சான்றுடனும் உழைத்திருக்கிறேன்.

ஒரு தனி மனிதனின் வரலாற்றில் ஓராண்டு என்பது நீண்டதாக இருக்கலாம். ஆனால், ஒரு நாட்டின்; ஒரு மாநிலத்தின் வரலாற்றில் ஓராண்டு என்பது ஒரு துளிதான். துளி போன்ற இந்த காலத்தில் கடலளவு சாதனைகளைச் செய்துள்ளோம்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியைப் போல் எனக்கு பேசத் தெரியாது; அவரைப் போல் எழுதத் தெரியாது; எனினும், அதற்காக முயன்று பார்ப்பேன் என்று உறுதி கூறி இருந்தேன். அன்று ஏற்ற உறுதிமொழியை ஓராண்டு காலத்தில் காப்பாற்றி இருக்கிறேன்.

மாநிலம் முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை சாதித்துக்காட்டுவதற்காக அரசு செயல்பட்டு வருகிறது. அரசின் திட்டங்கள் சென்று சேராத இடமே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மகளிருக்கான இலவச பேருந்து பயணம், பெண்களின் வாழ்க்கையில் எத்தகைய முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நினைத்துப்பார்க்கவேண்டும். 29C பேருந்து மூலம் பயணித்துதான் பள்ளிக்கு சென்று படித்தேன். அந்த பேருந்தில்தான் இன்றும் பயணித்தேன். பேருந்தில் பயணம் செய்த மக்களிடம், ஆட்சி திருப்தியாக இருக்கிறதா? என்று கேட்டேன். ரொம்பவும் திருப்தி என்று மக்கள் கூறினார்கள்.

மாநில திட்டக்குழுவால் மகளிருக்கான இலவச பேருந்து பயணம் பற்றி கருத்து கேட்கப்பட்டது. இதன் மூலம் பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பலனடைந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு இலவச பயணம் மூலம் மாதந்தோறும் ரூ.5,000 மிச்சமாகிறது. இதுவரை 106.34 கோடி பயணிகள் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் அன்றாட செலவில் 20% பணம் மிச்சமாகியுள்ளது. இதுவே அரசின் உண்மையான சாதனை. ஏனெனில், ஒரே ஒரு கையெழுத்தின் மூலம் பலகோடி மக்களுக்கு நன்மை கிடைத்துள்ளது.

கொரோனா கால நிவாரணமாக மளிகைப் பொருட்களை பெற்றவர்கள் 2,07,77,535 பேர்

ஆவின் பால் விலை ரூ.3 குறைக்கப்பட்டதால் பயன்பெற்றவர்கள் ஒரு கோடி பேர்

புதிதாக மின் இணைப்பு பெற்றவர்கள் 9 லட்சத்து 91 ஆயிரம் பேர்

அகவிலைப்படி உயர்வால் பயனடைந்த ஓய்வூதியதாரர்கள் 7 லட்சத்து 15 ஆயிரம் பேர்

மகளிர் சுய உதவிக் குழுக்களால் பயனடைந்தவர்கள் 54,05,400 பேர்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தால் பயன்பெற்றவர்கள் 93,34,315 பேர்

108 அவசர கால ஊர்தியால் பயன்பெற்றவர்கள் 16,41,000 பேர்

கலைஞர் வரும் முன் காப்போம் திட்டத்தால் பயன் பெற்றவர்கள் 8 லட்சத்து 25 ஆயிரம் பேர்

கொரோனா காலத்தில் சிறு குறு நடுத்தர தொழில் கடன் பெற்றோர் 539 பேர்

தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்கள் 124 பேர்

கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டை பெற்றவர்கள் 55,743 பேர்

மழை வெள்ளத்தால் பயிர்கள் இழப்பீடு பெற்றவர்கள் 3,59,000 பேர்

நத்தம் திட்டத்தின் கீழ் வீட்டுமனை பட்டா பெற்றவர்கள் 56 ஆயிரம் பேர்

வீட்டு வசதி வாரியம் மூலமாக வீடு பெற்றவர்கள் 6,323 பேர்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தால் வேலை பெற்றவர்கள் 24 பேர்

மொட்டை போடும் தொழிலாளர்களுக்கான ஊதியம் பெற்றவர்கள் 1,744 பேர்

இலவச கருவிகள் பெற்ற மாற்றுத்திறனாளிகள் 37 ஆயிரம் பேர்

போட்டித்தேர்வு முகாம்களில் பயிற்சி பெற்றவர்கள் 12 ஆயிரம் பேர்

முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் பலன் பெற்றவர்கள் மூன்று லட்சத்து 263 பேர்

பயிர் கடன் பெற்றவர்கள் 14 லட்சத்து 83 ஆயிரத்து 961 பேர்

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி தொகுப்பு பெற்றவர்கள் 2 லட்சத்து 87 ஆயிரத்து 401 பேர்

பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் பயன்பெற்ற இலங்கை தமிழர்கள் 92,669 பேர்

புலம்பெயர் தொழிலாளர்கள் 1.2 லட்சம் பேர்

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement:
SHARE

Related posts

நெகிழியால் பறவை இனங்கள் அழியும் அபாய நிலை?

Vandhana

“தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் அதிபர்களுக்காக ஆட்சி நடக்கிறது”

Halley Karthik

‘மின்வெட்டு பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்’ – இபிஎஸ்

Arivazhagan CM