மக்களின் துன்பங்கள், துயரங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுகிறது என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், வெள்ளாலபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் துன்பங்கள், துயரங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுகிறது எனக்கூறினார்.
ஆனால், வெள்ள பாதிப்பு தொடர்பான புகார்களுக்கு மறுப்பு சொல்ல இயலாத திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சியை மிரட்டும் தொனியில் பேசி வருவதாக சாடினார். மேலும், அதிமுக ஆட்சியில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும், அதிமுக ஆட்சியில் நிறைய திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.








