வாக்காளர் பட்டியலில் பேர் சேர்க்க 4. 38 லட்சம் பேர் விண்ணப்பம்

சிறப்பு முகாம்கள் மூலம் 5 லட்சத்து 90 ஆயிரத்து 539 பேர், வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார் இந்திய…

சிறப்பு முகாம்கள் மூலம் 5 லட்சத்து 90 ஆயிரத்து 539 பேர், வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்தாண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதனடிப்படையில், வாக்களர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிகளிக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

அவ்வாறு, கடந்த 13, 14 ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு முகாம்களில் புதிதாக பெயர் சேர்க்க மட்டும் 4 லட்சத்து 38 ஆயிரத்து 383 விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

மேலும், பெயர், முகவரி திருத்தங்களுக்கு 52 ஆயிரத்து 72 பேர், முகவரி திருத்தங்கள் மேற்கொள்ள 54 ஆயிரத்து 596 பேர் என மொத்தமாக 5 லட்சத்து 90 ஆயிரத்து 539 பேர் விண்ணப்பித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், வாக்காளர்களுக்கான அடுத்த சிறப்பு முகாம் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என்றும அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.