முதலமைச்சர் விஜய் தலைமையில் வேளாண்மைதுறை ஆய்வு கூட்டம்…!

தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று வேளாண்மை துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ் நாடு பட்ஜெட் 2026-27 ஆனது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட கூடும் என்று கூறப்படுகிறது. இதனையொட்டி இன்று தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கு பெற்றனர். இக்கூட்டத்தில் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட வேண்டிய நிதி, புதிய வரிவிதிப்புகள் மற்றும் சலுகைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் , வேளாண்மை – உழவர் நலத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சன், தலைமைச் செயலாளர் சாய்குமார், இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக், இ.ஆ.ப., வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை செயலாளர் சங்கர், இ.ஆ.ப. மற்றும் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.