நடிகரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சனையால் நீண்ட நாட்களாக வெளியாகாமால் இருந்தது. இந்த நிலையில் நேற்று இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் படி ஜூலை 23 ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படம் வெளியாகிறது.
ஜனநாயகன் ரிலீஸ் தேதி அறிவிப்பை தொடர்ந்து ஜிவி பிரகாஷின் இம்மார்டல் படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜின் டிசி திரைப்படத்தின் ரீலீஸ் தேதியும் மாற்றபட்டுள்ளது. அதன் படி ஜூலை 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் டிசி திரைப்படதிற்கு தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
ராக்கி, சாணி காயிதம், கேப்டன் மில்லர் உள்ளிட்ட திரைப்படங்களில் இயக்கிய அருண் மாதேஷ்வர் இயக்கியுள்ள திரைப்படம் டிசி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ள இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை வாமிகா கபி நடித்துள்ளார்.
சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். அண்மையில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.




