வேளாண் பட்ஜெட்: இலவச மும்முனை மின்சார திட்டத்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு!

இலவச மும்முனை மின்சார திட்டத்திற்கு ரூ.7,432 கோடியே 58 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். இதில் மிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு 7,432 கோடியே 58 இலட்சம் ரூபாய் உத்க்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் வினோத் பேசியதாவது, “ முதலமைச்சர் எல்லா விவசாயக் குடும்பங்களுக்கும் மகனாக இருக்கிறார். அதனால்தான், பயிர் சாகுபடியைத் தொடர்ந்து மேற்கொள்ள உழவர்களுக்கு வழங்கப்படும் இலவச மும்முனை மின்சார சேவையானது, இவ்வரசால் எவ்விதத் தடையுமின்றி தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.

அதன்படி, 2026–2027 ஆம் ஆண்டில் இலவச மின் இணைப்புகளுக்கான கட்டணத் தொகையாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு 7,432 கோடியே 58 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்” இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.