2026-27 வேளாண் பட்ஜெட்: இல்லதரசிகளுக்கு ‘வீட்டுத் தோட்டம்’ திட்டம்!

வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் வீட்டில் தோட்டம் அமைத்து வருவாய் ஈட்டும் வகையில் “வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று 2026-27-ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். இதில் வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் வீட்டில் தோட்டம் அமைத்து வருவாய் ஈட்டும் வகையில் “வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பட்ஜெட் உரையில் அமைச்சர் வினோத் கூறியதாவது, “வீட்டுத்தோட்டங்களில் இரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் நச்சுத்தன்மையற்ற இயற்கை உரங்களைப் பயன்படுத்தி பழங்களும் காய்கறிகளும் உற்பத்தி செய்யப்படுவதால் ஊட்டச்சத்துப்
பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் குறைகிறது.


எனவே, நகர்ப்புரங்களில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் கிராமப்புரங்களில், வீட்டைச் சுற்றியுள்ள நிலப் பகுதிகளிலும் செடி வளர்ப்புப் பைகளுடன் கூடிய தொகுப்புகள், செங்குத்துத் தோட்டம் மற்றும் நீரியல் தோட்டம் ஆகிய அமைப்புகளில் காய்கறிகள், பழங்கள், மூலிகைச் செடிகள் போன்றவற்றை வளர்த்து மனமலர்ச்சியையும், நலமான சூழலையும் ஏற்படுத்த “வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம் திட்டம்” நடப்பாண்டில் 10 கோடி ரூபாய் மாநில நிதியில் செயல்படுத்தப்படும்.”இவ்வாறு அவர் பேசினார்.

    சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.