சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் வெளியீடு!

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.

2026-27 நிதியாண்டிற்கான தமிழ்நாடு பொது பட்ஜெட்டை இன்று தொடங்கியது. இது செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் மற்றும் எந்தெந்த நாளில் நடைபெறும் என்பது குறித்து அறிக்கை வெளியாகியுள்ளது. அதில்,

6-8-2026 : 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கலாகிறது.

7-8-2026 : 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீது பொது விவாதம் தொடங்குகிறது.

10-8-2026 : 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான 2-வது நாள் விவாதம் நடக்கிறது.

11-8-2026 : 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான 3-வது நாள் விவாதம் நடக்கிறது.

12-8-2026 : 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படுகிறது.

13-8-2026 : பேரவைக் கூட்டம் இல்லை

14-8-2026 : பேரவைக் கூட்டம் இல்லை

15-8-2026 : சுதந்திரத் திருநாள் – அரசு விடுமுறை

16-8-2026 : அரசு விடுமுறை

தொடர்ந்து மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.

17-8-2026 : வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை.

18-8-2026 : நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டிடங்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, மனித வள மேலாண்மை துறை.

19-8-2026 : நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சுற்றுலா கலை மற்றும் பண்பாடு.

20-8-2026 : உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு.

21-8-2026 : சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, நீதி நிர்வாகம்,எரிசக்தித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள், சட்டத்துறை, இந்து சமய அறநிலையத் துறை.

24-8-2026 : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, பள்ளி கல்வித் துறை, தமிழ் வளர்ச்சி, உயர் கல்வித் துறை.

25-8-2026 : இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை.

27-8-2026 : சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை.

28-8-2026 : இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள் – நிர்வாகம், போக்குவரத்து துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை.

31-8-2026 :மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை.

1-9-2026 :கைத்தறி மற்றும் துணிநூல், கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை.

2-9-2026 :பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு.

3-9-2026 :காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்.

7-9-2026 :காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு, வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்.

8-9-2026 : பொதுத்துறை, மாநில சட்டமன்றம், கவர்னர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.