முக்கியச் செய்திகள் இந்தியா

ஜம்மு காஷ்மீர் தாக்குதல்; 3 ராணுவ வீரர்கள் படுகாயம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடத்த துப்பாக்கிசூட்டில் 3 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். 

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. போதை பொருள் கடத்தல், ஆயுத கடத்தல், வெடிகுண்டு வீசுதல் போன்ற பயங்கரவாத செயல்களில் பயங்கரவாதிகள் அடிக்கடி ஈடுப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க இந்திய ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் போலீஸ், எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள ரிஷிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பாதுகாப்புப்படை வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். மேலும் பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்தார். அவர்கள் உடனடியாக ஸ்ரீ நகரில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். பயங்கரவாதிகளுடன் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதாக போலீஸ் செய்திதொடர்பாளர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேபோல், சோபியான் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் வாகனத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சமூக நீதியின் காவலர் பிரதமர் மோடி – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

Dinesh A

எம்.சாண்ட் மணல் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

EZHILARASAN D

சிறிய காடாக மாறிய வீடு; பூந்தொட்டிகள் ஆன தேங்காய் மட்டைகள்; கவனத்தை ஈர்க்கும் போபால் பெண்!

Jayapriya