திருப்பூரில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்கள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், விசாரணை அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மால்டா குடியரசு நாட்டைச் சேர்ந்த அமைச்சர் ஜோ எட்டினே அபெலா உடன் சந்தித்து கலந்தாலோசித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு நாட்டு மருத்துவத்துறை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மால்டா நாட்டில் மருத்துவத்துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளது. மால்டா நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட பின் தமிழகத்தில் உள்ள செவிலியர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மழை நீர் புகும் இடங்களில் பொது பணித்துறை அதிகாரிகளுடன் பேசி மழை நீர் புகாத வண்ணம் விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கவில்லை. வழக்கமாக இருந்த அளவு தான் இருக்கிறது என விளக்கமளித்த அவர், வீடுகளில் தெருக்களில் மழை நீர் தேங்காத அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தபட உள்ளது என கூறினார். தமிழ்நாட்டில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் மூலம் பயன் பெற்றுள்ளார்கள்.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவக்கல பணியாளர்கள் வேலை வாய்ப்புகாக எம் ஜி ஆர் பல்கலைக்கழகம் மால்டா நாட்டு பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யபட உள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையே வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவ சுற்றுலா அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் 3 குழந்தைகள் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் உயிரிழந்தது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கமளித்தார்.
-இரா.நம்பிராஜன்