சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதாக, தாம்பரம் அமமுக வேட்பாளர் கரிகாலன் உறுதி அளித்தார்.
தாம்பரம் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் கரிகாலன், மேற்கு தாம்பரத்தில் பல்வேறு இடங்களில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அமமுக உள்ளிட்ட கூட்ணி கட்சியினர் அமமுக வேட்பாளருக்கு சிறப்பாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கரிகாலன், வாக்கு சேகரிக்க சென்ற இடங்களில், மக்களிடம் அமோக வரவேற்பு இருப்பதாக தெரிவித்தார். மேலும், கூட்டணி கட்சியினர் கடுமையாக உழைப்பதாகவும், அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும், என தமிழக மக்கள் நினைப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், நகரமன்ற தலைவராக இருந்தபோது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது போலவே, தாம்பரம் எம்.எல்.ஏவாக தேர்தெடுக்கப்பட்டால் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தாம்பரத்தில் பன்னடுக்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்தி கொடுப்பதாகவும், அவர் உறுதி அளித்தார்.







