முக்கியச் செய்திகள் தமிழகம்

27% ஓபிசி இடஒதுக்கீட்டிற்கு தடையில்லை

 

மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதுகுறித்து திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற உத்தரவின்படி குழு அமைக்கப்பட்டு, இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்படவில்லை என தெரிவித்த நீதிபதிகள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியாக இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதனை அடுத்து மருத்துவ படிப்புக்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கது என்று அறிவித்த நீதிபதிகள், பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.  உச்சநீதிமன்ற ஒப்புதல் பெறாவிட்டால் இட ஒதுக்கீடு அனுமதிக்கத்தக்கதல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

வாக்களித்தவர்களுக்கு உணவு விலையில் 5% தள்ளுபடி!

Halley karthi

பிரதமர் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்

Gayathri Venkatesan

எல்.முருகன் உட்பட 43 மத்திய அமைச்சர்கள் விவரம்.. யார் யாருக்குப் பதவி?

Saravana Kumar