ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்கள்; ஐநா கவலை

ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் அரசு படைகளுக்கு இடையேயான மோதல் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு…

ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் அரசு படைகளுக்கு இடையேயான மோதல் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டு போர் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அரசுப்படைக்கு ஆதரவாக அமெரிக்கா தனது படைகளை நிறுத்தி வைத்திருந்தது. சுமார் 20 ஆண்டுகளாக அங்கு முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறி வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் அனைத்து படைகளும் அங்கிருந்து வெளியேறிவிடும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான பகுதிகளை அரசு படைகளிடம் இருந்து தலிபான் படையினர் கைப்பற்றி விட்டனர். மோதல் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து அங்கிருந்து அமெரிக்கர்கள், இங்கிலாந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் ஐநா பாதுகாபு கவுன்சில் தலைவர் அண்டோனியோ குட்ரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இருதரப்பு மோதலில் கடந்த மாதம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார். இருதரப்பினரின் மோதல் காரணமாக 2 லட்சத்து 41 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாக தெரிவித்த அவர்,  இந்த சூழலில் மனித நேய உதவிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.