ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – உலகக்கோப்பை சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் ரஷீத் கான்!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உலக கோப்பை போட்டியில் தனக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் நன்கொடையாக வழங்குவதாக ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ரஷித் கான் அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில்…

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உலக கோப்பை போட்டியில் தனக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் நன்கொடையாக வழங்குவதாக ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ரஷித் கான் அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. அந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து 5.5 ரிக்டா் அளவு கொண்ட பின்னதிா்வு ஏற்பட்டதாகவும் அந்த மையம் கூறியது.

இந்த நிலநடுக்கத்தில் 320 போ் உயிரிழந்ததாக ஐ.நா. முதலில் தெரிவித்த நிலையில், தற்போது பலியானோர் எண்ணிக்கை 2000 பேரை தாண்டியுள்ளதாகவும், சுமார் 6 கிராமங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்படவர்களுக்கு உதவும் வகையில், உலக கோப்பை போட்டிகளுக்கு தனக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் நன்கொடையாக வழங்க உள்ளதாக ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ரஷித் கான் அறிவித்துள்ளார். மேலும், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிந்து வருந்துவதாகவும், நிதி திரட்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபட இருப்பதாக ரஷித் கான் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.