தமிழக அரசிற்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்பை எதிர்க்கட்சியாக அதிமுக வழங்கும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர், கொரோனவை எதிர்கொள்ள முகக் கவசம் ஆயுதம் என்றும், தடுப்பூசி பேராயுதம் என்றும் தெரிவித்தார்.
கொரோனாவை கட்டுப்படுத்த சிகிச்சை மையங்கள் மற்றும் பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திய அவர், தடுப்பூசியை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் எனவும் இறப்பு எண்ணிக்கையை குறைப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.







