கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளை கொண்ட ஆலோசனை குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அதிமுக, காங்கிரஸ், பாமக, பாஜக உள்ளிட்ட 13 கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இக்குழுவின் முதல் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நாளை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிப்பு, கட்டுப்பாடுகளை தீவிரமாக்குவது உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.






