5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

ஐந்து மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு பல அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போது ஐந்து மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள்…

ஐந்து மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு பல அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போது ஐந்து மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

தருமபுரி, திருச்சி, மதுரை, கடலூர், சேலம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, மதுரை மாவட்ட ஆட்சியராக அனீஷ் சேகர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் ஆட்சியராக கார்மேகம் ஐஏஎஸ்-ம், கடலூர் ஆட்சியராக பாலசுப்பிரமணியம் ஐஏஎஸ்-ம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், திருச்சி ஆட்சியராக சிவராசு ஐஏஎஸ் மற்றும் தருமபுரி மாவட்ட ஆட்சியராக திவ்யதர்ஷினி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.