அதிமுக தலைமை அலுவகத்தைக் கைப்பற்றினார் ஓ பன்னீர் செல்வம்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், பொதுக்குழுவிற்கு செல்லாத ஓ.பன்னீர்செல்வம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு ஓபிஎஸ், இபிஸ் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் உண்டானது. எனினும், தொடர்ந்து முன்னேறிய ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஒரு கட்டத்தில் தலைமை அலுவலகத்தின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
அதிமுக அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தூக்கி எறிந்து வருகின்றனர். கட்சி அலுவலகத்திற்கு உள்ளே உள்ள சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டு ஓபிஎஸ் வாகனத்தில் ஏற்றினர். வெளியே பரபரப்பான சூழல் காணப்படும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அதில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி ஆகியோர் உள்ளனர். பொதுக்குழு ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க அதிமுக தலைமை அலுவகத்தைக் கைப்பற்றியுள்ளார் ஓபிஎஸ்.
பொதுக்குழுவை நடத்தலாம் என்ற தீர்ப்பு வந்த பிறகு இபிஎஸ் ஆதவாளர்கள் தங்களை அதிமுக அலுவலகத்திற்கு உள்ளே விட வேண்டும் என்று போலீசாரிடம் வாக்குவாதம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். கலவரமான சூழல் காணப்படும் நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் அருகே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.









